ALL STUDENT ASSOCIATION ANNUAL MEETING

remembering you and "MADHUSUTHANAN" in our minds and our hearts.

cccmenu

Drop Down MenusCSS Drop Down MenuPure CSS Dropdown Menu

Sunday, June 5, 2016

Forgien Page 2016/06/05

this page is designed by ziegen at weekly thinakkural on and this is regarding by 

The world's longest rail tunnel, running for 35 miles under the Swiss Alps, opens on schedule and within budget at £8.5 billion - and it will mean a MILLION fewer trucks on the roads
Plastic bottles, bags, shoe covers: Why Taj Mahal has become a dumpyard

சீகனின் கைவண்ணத்தில் உருவான இந்த Forgien  பக்க வடிவமைப்பானது 2016/06/05 ஞாயிறு தினக்குரல் பத்திரிகைக்காக வடிவமைக்கப்பட்டது.இந்த பக்கத்தில் சமிபத்தில் உலகில் நீளமான ரயில் பதை  பற்றி பிரச்சன்னா ஆல் ஏழுதப்பட்டது.











உலகின் மிகப்பெரிய ரயில் சுரங்கப்பாதை சுவிட்சர்லாந்தில் கட்டிமுடிக்கப்பட்டு தற்போது மக்கள் பாவனைக்காக திறந்துவிடப்பட்டுள்ளது. கடந்த 17 வருடகால உழைப்பின் பின் 12 பில்லியன் டொலர்கள் செலவில் இச்சுரங்கப்பாதை உருவாக்கப்பட்டுள்ளது. சுவிஸின் அல்ப்ஸ் மலைத்தொடரை ஊடறுத்துச் செல்லும் இப்பாதையானது 57 கி.மீ. நீளமானதாகும். இச்சுரங்கமானது இருவழி ரயில் பாதைகளை கொண்டுள்ளதுடன் சகல வசதிகளையும் உள்ளடக்கியதாக சுவிஸ் பொறியியலாளர்களால் கட்டிமுடிக்கப்பட்டுள்ளது. இச்சுரங்கப் பாதையானது, கட்டிமுடிக்கப்படுவதற்கு முன்னர் சூரிச்சில் இருந்து  மிலன் நகரை அடைவதற்கு 1 மணித்தியாலம் தேவைப்பட்டிருந்தது. தற்போது 20 நிமிடங்களில் இப்பயணத்தை நிறைவு செய்யக்கூடிய வாய்ப்பு கிடைத்துள்ளது. 


அதிவேக ரயில்கள் மூலம் பயணிகள் மற்றும் பொதிகளை தெற்கு ஐரோப்பாவிலிருந்து வட ஐரோப்பாவிற்கு 20 நிமிடங்களில் கொண்டு செல்ல முடியும். இதே பாதையில் கடந்த சில வருடங்களாக மில்லியன் கணக்கான லொறிகள் பொருட்களை சுமந்து சென்றிருந்தன. தற்போது அவ்விடத்தில் ரயில்கள் பயணிக்கின்றன. இவ் ரயில் பாதையானது ஐரோப்பாவின் பிரதான ரயில்மார்க்கத்துடன் ரொட்டர்டேமில் இணைகிறது. 73 மலை உச்சிகளை ஊடறுத்துச் செல்லும் இப்பாதையில், 28 மில்லியன் தொன்களுடைய கற்பாறைகள் அகற்றப்பட்டுள்ளன. ஆனாலும் இம்மார்க்கத்தினூடான உத்தியோகப்பூர்வ ரயில் சேவை இவ்வருடம் டிசம்பர் 11ஆம் திகதியுடன் ஆரம்பிக்கின்றது. கோட்டஹார்ட் தள சுரங்கப்பாதையானது பலவருடங்கள் கடந்தே இலக்கை அடைந்துள்ளது. சுவிஸ் பொறியியலாளர்கள் 1947ஆம் ஆண்டு இத்திட்டத்தை ஆரம்பிப்பது தொடர்பில் விவாதித்து வந்திருந்தனர். 1963ஆம் ஆண்டு இதற்காக ஆணைக்குழு அமைக்கப்பட்டு விடயம் தொடர்பில் ஆராயப்பட்டதுடன் 1992ஆம் ஆண்டு இடம்பெற்ற பொதுசன அபிப்பிராய வாக்கெடுப்பின் மூலம் அனுமதியும் பெறப்பட்டது. 1995ஆம் ஆண்டு முதல் பொறியியலாளர்கள் இத்திட்டத்தை முன்னெடுக்கத் தொடங்கியிருந்தனர். 2002ஆம் ஆண்டு சுரங்கத்தின் வடக்கு, தெற்கு ஆரம்ப, முடிவுபகுதிகளில் முன்னெடுக்கப்பட்ட வேலைத்திட்டமானது 2011ஆம் ஆண்டு மார்ச் மாதம் நிறைவுக்கு வந்திருந்தது. இதன்பின்பு சுமார் 28 மில்லியன் தொன்கள் நிறைந்த கற்பாறைகள் பாரிய இயந்திரங்களைக் கொண்டு அகற்றப்பட்டிருந்தன. 
40 மீற்றர் இடைவெளியில் இரண்டு சுரங்கரயில் பாதைத்தளங்கள் அமைக்கப்பட்டுள்ளன. இப்பதையினூடாக முதல் ரயில் வெள்ளோட்டம் 2015இல் ஆரம்பிக்கப்பட்டதுடன் பயணிகள் மற்றும் சரக்கு ரயில்கள் இம்மாதம் முதல் ஆரம்பிக்கப்பட்டு எதிர்வரும் டிசம்பர் மாதம் முதல் உத்தியோகப்பூர்வமாக ரயில் பயணச்சேவைகள் பிரதான பாதையூடாக ஆரம்பிக்கப்படுமென தெரிவிக்கப்பட்டுள்ளது. 46 பாகை செல்சியஸ் வெப்பநிலையில் இத்தளம் அமையப்பெற்றுள்ளது. இச்சுரங்கப்பாதை அமைப்பதற்கான இயந்திரங்கள், உலகின் மிகப்பாரிய கட்டுமான உபகரண உற்பத்தியாளர்களான ஜேர்மனி நிறுவனத்தால் வழங்கப்பட்டிருந்தது. இவ்வியந்திரங்கள் மிகவும் ஆபத்தான நிலையிலும் சிறப்பாக செயல்படக்கூடியன. 


மில்லியன் கணக்கான தொன்களையுடைய சரக்குகளை இதுவரையும் மிக உயரமான மலையான அல்ப்ஸ் மலைத்தொடரினைச் சுற்றியே கொண்டு செல்ல வேண்டிய நிலை காணப்பட்டது. இதற்காக டீசல் என்ஜின்களுடைய ரயில்களை பயன்படுத்த வேண்டிய தேவையிருந்தது. ஆனால் தற்போது மின்சார ரயில்கள் மூலம் ஒவ்வொரு வருடமும் 40 மில்லியன் தொன்களுடைய சரக்குகளை சுரங்கப்பாதையில் கொண்டு செல்லலாம். இப்பாதையூடாக ஒவ்வொரு நாளும் 200-250 வரையான சரக்கு ரயில்கள் பயணிக்கின்றமையும்  குறிப்பிடத்தக்கது. பயணிகள் ரயில் போக்குவரத்தும் இப்பாதையூடாக ஆரம்பிக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் சூரிச்சிலிருந்து லக்னோவுக்கு 45 நிமிடங்களில் பயணிக்க முடியும்.  

இந்த கோட்டஹார்ட் தள சுரங்கப்பாதையின் மூலம் அதிகளவான பொருளாதார நன்மைகளை பெற்றுக்கொள்ளக்கூடிய வாய்ப்பு ஏற்பட்டுள்ளது. அதிகமாக இப்பாதையூடாக அதிக சரக்குகளையும், பயணிகளையும் விரைவாகவும் மலிவாகவும் கொண்டு சேர்க்க முடியும். 2019ஆம் ஆண்டு அல்பியன் மலைத்தொடருக்கூடாக இப்பாதை விஸ்தரிக்கப்பட்டவுடன் இன்னும் இப்பொருளாதார நன்மைகள் அதிகரிக்கலாமென எதிர்பார்க்கப்படுகிறது. தற்போது இச்சுரங்கமானது உலகின் மிக நீளமான (57.5கி.மீ) சுரங்க ரயில் பாதையாக உருவெடுத்துள்ளது. இதற்கு  முன் 1988-ஜப்பான் (53.9 கி.மீ), 1994-பிரான்ஸ்- பிரிட்டிஸ் (50.5கி.மீ), 2015-தென்கொரியா(50.3 கி.மீ), 2007-சுவிஸ் (34.6 கி.மீ), 2014-சீனா (32.6 கி.மீ), 2007-ஸ்பெய்ன் (28.4கி.மீ) போன்ற நாடுகள் இதற்குமுன் நீளமான ரயில் சுரங்கப்பாதைகளை அமைத்திருக்கின்றன. எனினும் 17 வருடகால உழைப்பில் உருவாகியுள்ள கோட்டஹார்ட் தள சுரங்கமே இனி உலகின் மிக நீண்ட ரயில் சுரங்கமாக வரலாற்றில் பதிய போகிறது. 

உலகின் மிக நீளமான ரயில் சுரங்கம் 
நீளம்- 57.5 கி.மீ
பயண நேரம்- 20 நிமிடம்
சகல சுரங்கங்களினதும் நீளம்- 152 கி.மீ
சுரங்கத்தின் மிக உயரமான பகுதி- 550 மீற்றர் (கடல்மட்டத்திலிருந்து)
மலைகளால் சூழ்ந்த பகுதி- 2300 மீற்றர்
கட்டுமான காலம்- 17 வருடங்கள்
மொத்த செலவீனம்- 12 பில்லியன் அ.டொலர்
கொள்ளளவு- 260 சரக்கு ரயில், 65 பயணிகள் ரயில் (ஒவ்வொரு நாளும்)
வேகம்- சரக்குரயில் 100ஓட்/ட, பயணிகள் ரயில் 200ஓட்/ட
உயர்வேகம்- சரக்கு ரயில் 160ஓட்/ட, பயணிகள் ரயில்- 250ஓட்/ட




இந்தியாவின் மிகப்பெரிய பளிங்கு அதிசயமாக தாஜ்மஹால் உள்ளது. இது உலக காதலர்களின் நினைவுச் சின்னமாக போற்றப்படுகின்றது. 17 ஆம் நூற்றாண்டில் 20,000 தொழிலாளர்களைக் கொண்டு 17 வருடங்களில் கட்டிமுடிக்கப்பட்டது. அன்றுமுதல் இன்றுவரை தாஜ்மஹால் உலகச் சின்னமாகவே பார்க்கப்படுகிறது. தாஜ்மஹால் பளிங்கு கற்களால் உருவாக்கப்பட்டுள்ளதால், அதிகம் பிரகாசிக்கக் கூடிய தன்மையை கொண்டது. ஆனால் சமீபகாலமாக தாஜ்மஹாலின் நிறமானது மங்கிவருவதால் உலக மரபுரிமைச்சின்ன பாதுகாவலர்களின் கவனத்தைப் பெற்றுள்ளது. சுற்றுச்சூழல் மாசடைவும் வளி மாசடைவுமே தாஜ்மஹாலின் நிறமாற்றத்துக்கு பிரதான காரணமாக இருக்கின்றது.

ஒவ்வொரு முறையும் ஆட்சிக்கு வரும் அரசாங்கங்கள் தாஜ்மஹாலின் அழகை மெருகேற்றுவதற்கு பலமில்லியன் ரூபாக்களை ஒதுக்கினாலும், சுற்றுச்சூழலில் ஏற்படுகின்ற மாற்றங்களை தடுக்க முடியாமலிருக்கின்றது. கடந்த தசாப்தங்களில் ஆட்சியில் இருந்த அரசாங்கங்களால் 150 மில்லியன் அ.டொலர்களால் வரை தாஜ்மஹாலுக்காக செலவிடப்பட்டுள்ளன. ஆக்ரா வழியாக 150 கிலோ மீற்றர் தூரம் பயணிக்கும் யமுனை நதியானது டெல்லியைச் சூழவுள்ள தொழிற்சாலைகளினால் கடுமையான மாசடைவுக்கு உள்ளாக்கப்படுகின்றது. இந்த யமுனை நதியை அண்மித்தே தாஜ் மஹால் அமைக்கப்பட்டிருக்கிறது. இந்துக்களின் மதப்பிரகாரம் இறந்த உடல்களை எரிக்கும் வழக்கம் இருக்கிறது.

யமுனை நதிக்கருகில் இறந்தவர்களின் உடல்களை பலகைகளை கொண்டு தீமூட்டுவதால் அவற்றிலிருந்து வெளியேறும் புகையானது வளியோடு கலந்து வளிமாசடைவதுடன் அண்மித்துள்ள தாஜ்மஹாலையும் மாசுபட வைக்கின்றது. இதனால் தாஜ்மஹாலின் பளிங்குகள், கருநிற புள்ளிகளுடன் மஞ்சள் நிறமாக மங்கிய நிலையில் காணப்படுவதாக சுற்றுச்சூழல் ஆர்வலர்கள் தெரிவித்துள்ளனர். இந்தியாவின் சுற்றுச்சூழல் கட்டுமான ஆய்வு நிலையமானது, வளி மற்றும் நீர் மூலமே தாஜ்மஹால் மாசுபடுத்தப்படுவதாக  தெரிவித்துள்ளது. தாஜ் மஹால் அமைந்துள்ள ஆக்ரா பகுதியில் கடந்த சிலவருடங்களாக தொழிற்சாலைகள், வாகன நெரிசல்கள் மற்றும் சனத்தொகை என்பன அதிகரித்து வருவதால் இந்நிலை ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

1998-2000 வரையில் அரசாங்க திட்டத்தினூடாக நினைவுச்சின்னம் மஞ்சள் நிறமாக மாறாமல் பளிச்சிடுவதற்காக 90 மில்லியன் யூரோக்கள் செலவிடப்பட்டுள்ளன. சனத்தொகை செறிவும் அதிக வறுமை நிலையினை கொண்ட மக்கள் வாழும் பிரதேசமான உத்தரபிரதேசத்திலேயே பல உற்பத்தி நிறுவனங்கள் அமையப்பெற்றுள்ளன. ஆக்ராவில் நீருக்கு மிகப்பெரிய தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. கடந்த சில வருடங்களாக நிலத்தடி நீர் நான்கு மீற்றருக்கும் கீழாக சென்றுவிட்டது. தொழிற்சாலை கழிவுகள், வடிகான்கள் என்பவற்றால் நீர் மிக மோசமாக மாசடைந்திருக்கின்றது. இவற்றை சுத்திகரிக்கும் போது ஏற்படுகின்ற மாசுக்கள் அருகிலுள்ள மாபில்களில் படிகின்றன.ஆக்ராவில் எண்ணெய் சுத்திகரிப்புத் தொழிற்சாலைகளுக்கு இயற்கை எரிவாயு, குழாய்கள் மூலம் பெறப்படுகிறது. அத்தோடு
நெடுஞ்சாலை அகலப்படுத்தும் திட்டங்கள், சுரங்கப்பாதை கட்டுமானங்கள், டீசல் வாகனங்களின் பாவனை, மின் தேவையை பூர்த்தி செய்வதற்கு, அதிக முதலீடுகளுடன் மாசுக் காரணிகளை வெளியிடக்கூடிய டீசல் மின் பிறப்பாக்கிகளை பயன்படுத்துதல் என்பன சூழல் மாசுபடுத்தலுக்கு பிரதான காரணங்களாக அமைந்திருக்கின்றன. யமுனை நதியானது இரசாயனம் மற்றும் மனிதக்கழிவுகளால் அதிகளவில் மாசடைவினைக் கொண்டுள்ளது. இந்தியாவின் அதியுயர் பிரசித்தி பெற்ற நகரமான ஆக்ரா, மோசமான வளிதரத்தினை கொண்டிருக்கின்றது.

இதனால் தாஜ்மஹால் தூசு மற்றும் காபன் வெளியீட்டு காரணிகளான எரியூட்டல் செயற்பாடு, இயற்கை எரிவாயு, குப்பைகளை எரித்தல் என்பவற்றால் மெது மெதுவாக நிறமாறும் நிலையிலிருக்கிறது. 366 வருடகால பழமையான தாஜ்மஹால் நிறம் மங்குவதால் பாதிப்பை எதிர்நோக்கியுள்ளது. தாஜ்மஹாலில் பாதிப்படைந்த மார்பில்களை ஆய்வுக்குட்படுத்தியதில் 3 வீதம் கறுப்பு கார்பன்களும்  30 வீதம் ஓர்கனிக் கார்பன்களும் மிக அதிகமாக தூசு படிந்திருப்பதும் உறுதிசெய்யப்பட்டுள்ளது. இதில் கறுப்பு கார்பனானது, வாகனப்புகையாலும் இயந்திரங்கள் மற்றும் எண்ணெய் எரியூட்டலாலும் ஏற்படுபவையாகும் .ஓர்கனிக் கார்பனானது, இயற்கை எரிவாயு மற்றும் குப்பைகளை எரியூட்டுவதால் உருவாகுபவையாகும். இவை இப்பகுதியின் பொதுவான பிரச்சினைகளாக இருக்கின்றன. இதில் கறுப்பு கார்பனானது மார்பிள்களுக்கு சாம்பல் நிறத்தையும் ஓர்கனிக் கார்பனானது மஞ்சள் கலந்த புரௌவ்ன் நிறத்தினையும் வழங்குகிறது .இவ்விடயம் தொடர்பாக சுற்றுச்சூழல் ஆர்வலரான டி.கே. ஜோஷி என்பவர், சுற்றுச்சூழல் பாதிப்புகள் தொடர்பான விவகாரங்களை ஆராய்வதற்காக அரசாங்கத்தால் உருவாக்கப்பட்டுள்ள தேசிய பச்சை முனையத்தில் முறையிட்டுள்ளார் .அதில் யமுனை நதியானது மாசுபடுவதே தாஜ்மஹாலின் பொலிவு மங்கிச் செல்வதற்கு காரணமெனவும் தெரிவித்துள்ளார்.52 வடிகான்கள், தாஜ்மஹால் அமைந்திருக்கின்ற பகுதியில் யமுனை நதியுடன் கலப்பதோடு அவை இடைவிடாது கழிவுகளை வெளியேற்றிக் கொண்டிருக்கின்றன. இவை யமுனை நதியிலேயே தேங்கி விடுவதால் மீன்பிடிக்கத் தடை விதிக்கப்பட்டுள்ளதுடன் மீன்களும் இறந்து போகும் நிலைமை ஏற்பட்டுள்ளது.

மேலும் பல்வேறு விதமான நோய்க்காவிகளும் மிகவிரைவாக உற்பத்தியாகுவதற்கு யமுனை நதி வழிவகுக்கின்றது. இந்தியாவின் தொல் பொருள் ஆராய்ச்சி திணைக்களத்தின் தொழிலாளர்கள் , மார்பிள்களிலுள்ள அழுக்குகளை துடைத்து சுத்தம் செய்தாலும் அடிக்கடி ஏற்படுகின்ற தூசுகளால் அதன் பிரகாசம் தடைப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதற்கு மிகச் சிறந்த தீர்வு யமுனை நதியினை சுத்தம் செய்வதாகவே இருக்குமென சமூக ஆர்வலரான டி.கே. ஜோஷி தெரிவித்துள்ளார். கடந்த திங்கட்கிழமை  உத்தரபிரதேச முதலமைச்சர் அகிலேஷ் யாதவ், இப்பிரச்சினைகளுக்கான காரணங்களை கண்டறிந்து தீர்வு காணுமாறு தெரிவித்திருந்ததும் குறிப்பிடத்தக்கது.
இந்தியாவின் மிகப்பெரிய சுற்றுலாத் தளமாக ஆக்ரா அமைந்திருப்பதால் மில்லியன் கணக்கான இந்தியர்களும் வெளிநாட்டவர்களும் வருகை தருகின்றனர் .ஒவ்வொரு வருடமும் 3 மில்லியனுக்கும் குறையாத சுற்றுலா பயணிகள் வருகைதருகின்றனர். 2013 ஆம் ஆண்டு இத்தொகை 6 மில்லியனுக்கும் அதிகமாக காணப்பட்டது. ஆனால் கடந்த சிலவருடங்களாக இந்த உலக மரபுரிமைச் சின்னத்தில் ஏற்பட்டுள்ள கோளாறுகளால், அவற்றை களைவதற்கான நடிவடிக்கைகளை தொல்லியல் ஆராய்ச்சித் திணைக்களம் மேற்கொண்டு வருகிறது. இதன் ஒரு கட்டமாக தாஜ்மஹாலில் மாசுபடிந்துள்ள பகுதிகளில் களிமண் கலவையை பூசும் நடிவடிக்கையை இத்திணைக்களம் மேற்கொண்டுவருகின்றது.

இவை தொடர்பாக திணைக்களத்தின் இரசாயனவியல் பிரிவு தெரிவிக்கையில், பண்டையகால இந்தியப் பெண்கள் தங்களது முகத்தை பளிச்சிட வைப்பதற்காக களிமண் கலவையை முகத்தில் பூசிக் கொள்ளும் பழக்கம் இருந்தது. இவற்றை அடிப்படையாகக் கொண்டு மண்ணுடன் சுண்ணாம்புகலவையை நீருடன் கலந்து சுவர் மீது பூசி 24 மணிநேரத்திற்கு மேல் காயவிட்ட பின்பு களிமண் கலவை அகற்றி சுத்திகரிக்கப்பட்ட நீரினை கொண்டு கழுவுகின்றனர் இவ்வாறான நடைமுறைகள் கடந்த 1994,2001,2008 மற்றும் 2014 ஆம் ஆண்டுகளில் தாஜ்மஹால் சுவரில் பின்பற்றப்பட்டிருக்கிறது. இதற்கு அடுத்த கட்டமாக வருகின்ற குளிர்காலங்களில் இந்நடைமுறை மீண்டும் முன்னெடுக்கப்படவுள்ளது.

தற்போது இந்தியா முழுவதும் வெயில் காலமாகையால் குளிர் காலங்களிலேயே இச்செயற்பாடு சாத்தியப்படுமென்பதுடன் உடனடித்தீர்வும் கிடைக்கும். ஆனாலும் தாஜ்மஹாலை பாதுகாப்பதற்காக உயர்நீதிமன்றமும் பல்வேறு அதிரடி உத்தரவுகளை பிறப்பித்திருக்கின்றன. 2002 ஆம் ஆண்டு முதலமைச்சர் மாயாவதி தலைமையிலான உத்தர பிரதேச அரசு தாஜ்மஹாலுக்கு அருகில் பல்பொருள் அங்காடியை நிர்மாணிப்பதற்கான
நடவடிக்கைகளை மேற்கொண்டிருந்தது. இதனால் தாஜ்மஹாலுக்கு வரும் பயணிகளின் எண்ணிக்கை குறைவதோடு சூழல் மாசுபாடும் ஏற்படுமென கூறி உயர் நீதிமன்றம் அதை தடைசெய்தது. அதே போலவே கடந்த வருடம் இறந்த உடல்களை யமுனை நதியில் பலகைகள் கொண்டு தீயிட்டு கொழுத்துவதை நிறுத்தியதுடன், இதற்கு மாற்று இடங்களை ஆராயும் படியும் அல்லது மின்சார எரியூட்டல் சாதனத்தை பயன்படுத்தும் படியும் உத்தர பிரதேச அரசுக்கு உத்தரவிட்டிருந்தது.


தற்போது தாஜ்மஹாலை அண்மித்து 500 மீற்றர் தூரமளவில் வாகனங்கள் செல்வதற்கு தடைவிதிக்கப்பட்டுள்ளதுடன் இலத்திரனியல் கடிகாரம் மூலம் வளிமாசடைவு அளவும் காட்சிப்படுத்தப்பட்டுள்ளது. இருப்பினும் சுற்றுச்சூழலில் உள்ள தொழிற்சாலை கழிவுகளை கட்டுப்படுத்த முடியாமல் இருக்கிறது. ஏற்கனவே சிரியாவிலுள்ள பால்மேரா மரபு சின்னங்கள்  தீவிரவாதிகளால தகர்க்கப்பட்டுள்ளன. சீனப்பெருஞ்சுவரில் கற்கள் திருடப்படுகின்றன என உலக மரபுரிமைச் சின்னங்களுக்கு ஆபத்துகள் நெருங்கி கொண்டே வருகின்றன. எனவே இவற்றைப் பாதுகாப்பதில் சம்பந்தப்பட்ட நாடுகள் அதிகம் கவனம் செலுத்த வேண்டும்

No comments:

Post a Comment